மரண செய்திகளுக்கு முற்றுப்புள்ளி - கம்பீரமாக பொதுவெளியில் தோன்றிய கிம் ஜொங் உன்!

#SriLanka #NorthKorea #FAKE NEWS #Kim Jong Un
Thamilini
2 hours ago
மரண செய்திகளுக்கு முற்றுப்புள்ளி - கம்பீரமாக பொதுவெளியில் தோன்றிய கிம் ஜொங் உன்!

வடகொரிய ஜனாதிபதிக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு அவர் கோமாவில் இருப்பதாகவும் தற்போது சீனாவில் மருத்து சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறப்பட்ட செய்திகளுக்கு கிம்ஜொங் உன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 அரசு ஊடகத்தில் கம்பீரமாக தோன்றிய அவர், ஆரோக்கியமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு போலி செய்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 42 வயதான கிம் ஜொங் உன் தனது மகளுடன் ஆடை மற்றும் காலணிக் கண்காட்சி ஒன்றைப் பார்வையிடும் காட்சி, ரோடோங் சின்முன் என்ற அரசு நாளிதழில் இடம்பெற்றுள்ளது.

 அமெரிக்காவில் வசிக்கும், தடைசெய்யப்பட்ட சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வான்ஜுன் ஷி, கிம் கோமா நிலையில் பெய்ஜிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் இறந்துவிட்டதாக ஆதாரமின்றி கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகே கிம் இந்த கட்காட்சியில் தோன்றிதாக கூறப்படுகிறது.

 வட கொரியாவின் அதீத ரகசியத்தன்மை காரணமாக, அதன் தலைமை குறித்த வதந்திகள் அடிக்கடி பரவுவதாகவும், இது தகவல்களைச் சரிபார்ப்பதை கடினமாக்குவதாகவும் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 அத்துடன் வட கொரியாவின் வம்ச வாரிசுரிமை தொடர்பான தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மைகளால் இந்த வதந்திகள் பெரும்பாலும் தூண்டப்படுகின்றன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

 கிம் தனது வாரிசாக சுமார் 13 வயதுடைய இளம் மகளைத் தயார்படுத்தி வருகிறார் என்று தென் கொரிய உளவுத்துறை நம்பினாலும், அவளது இளமையும், வட கொரியாவை இதுவரை ஒரு பெண் ஆட்சி செய்ததில்லை என்ற உண்மையும், அந்த ஆட்சியின் எதிர்காலம் குறித்த ஊகங்களையும் உறுதியற்ற தன்மையையும் தொடர்ந்து தூண்டிவிடுவதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!