வரி ஏய்ப்பு, பணமோசடியைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!
#SriLanka
#government
#LANKA4
#Finance
#Fraud
#Tax
Abi
1 hour ago
வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடியைத் தடுக்கும் நோக்கில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் மதுவரித் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரு திணைக்களங்களும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுடன், அவற்றின் அடிப்படையில் கூட்டாக விசாரணைகளையும் முன்னெடுக்கவுள்ளன.
சட்டவிரோத நிதிப் பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்துதல், வரி ஏய்ப்புக்கு எதிரான தணிக்கை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அரச வருவாய் சேகரிப்பை முறைப்படுத்துதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
நிதி அமைச்சில் ஒக்டோபர் 21ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளை அடைவதற்கான கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.