இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#NorthernProvince
#Rain
#LANKA4
#Western Province
#Department of Meteorology
Abi
4 hours ago
இலங்கைக்கு அருகில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி, தற்போது மேற்கு திசையை நோக்கி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த காற்றழுத்தப் பகுதியின் தாக்கம் இன்றும் (23) நாட்டின் பல பகுதிகளில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.