உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் வியட்நாம்!

#world_news #LANKA4 #sports #Vietnam #Large
Abi
3 hours ago
உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் வியட்நாம்!

உலக விளையாட்டுத் துறையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் பிரமாண்டமான விளையாட்டரங்கு ஒன்றை நிர்மாணித்து வருகின்றது.

‘வின்ஃபாஸ்ட் ட்ரொங் டொங்’ (VinFast Trong Dong) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கு, இந்தியாவின் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கை விடவும் பெரியதாக அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒலிம்பிக் விளையாட்டு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படுகின்றது.

இதற்கான அடிக்கல் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி நாட்டப்பட்ட நிலையில், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

நவீன கட்டடக்கலை அம்சங்களுடன், வியட்நாமின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விளையாட்டரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான கட்டமைப்பு, பண்டைய வியட்நாமின் புகழ்பெற்ற ‘டொங் சன்’ வெண்கல முரசின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மேலும், தானியங்கி முறையில் திறந்து மூடக்கூடிய பிரமாண்டமான கூரை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச கால்பந்துப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார விழாக்களை நடத்தும் வகையில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்படுகின்றது.

தற்போது 132,000 பார்வையாளர்களைக் கொண்ட இந்தியாவின் நரேந்திர மோடி விளையாட்டரங்கு, உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்காகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!