சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட இருவர் நவம்பர் 6 வரை விளக்கமறியலில்!

#SriLanka #Colombo #ARREST #CourtOrder #Minister #LANKA4 #Secretary
Abi
2 hours ago
சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட இருவர் நவம்பர் 6 வரை விளக்கமறியலில்!

பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடம் 84 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான், இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடம் 84 இலட்சம் ரூபா இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!