அரச நில அளவையாளர் சங்கம் நூற்றாண்டு நிறைவு – நில அளவைச் சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Department #LANKA4 #President #AnuraKumaraDissanayake
Abi
2 hours ago
அரச நில அளவையாளர் சங்கம் நூற்றாண்டு நிறைவு – நில அளவைச் சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு, “கடந்த காலத்தைக் கௌரவித்து, நிகழ்காலத்தைப் பலப்படுத்தி, எதிர்காலத்தை வரைபடமாக்குவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (23) முற்பகல் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிகழ்வின் பிரதம அதிதி, நில அளவைத் திணைக்களத்தின் வரலாற்றுப் பயணத்தையும், அரச நில அளவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு காலப் பணிகளையும் பாராட்டியதுடன், நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இவ்விரு நிறுவனங்களும் ஆற்றிவரும் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

அரச பொறிமுறையின் பழமையான திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமும், நூற்றாண்டைக் கடந்துள்ள அரச நில அளவையாளர் சங்கமும் தொழில்சார் கண்ணியம், சேவைத் தரம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திப் பயணத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், நில அளவைச் சேவையை நவீனமயப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் பணியாற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நில அளவைத் துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதுடன், தொழில்சார் அறிவையும் திறன்களையும் வலுப்படுத்தி, நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அதிகாரிகள் தமது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நில அளவைச் சேவையின் நூற்றாண்டு கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களையும் செயற்பாட்டு முறைகளையும் உள்வாங்கி, வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு, கடந்தகாலச் சாதனைகளை நினைவுகூருவதுடன், நிகழ்காலச் சவால்களை எதிர்கொண்டு எதிர்கால அபிவிருத்திக்கான புதிய வழிமுறைகளைத் திட்டமிடும் நிகழ்வாகவும் அமைந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!