வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - மழையுடன் கூடிய வானிலையே நீடிக்கும்!!

#SriLanka #weather #Rain #LANKA4 #Bay of Bengal
Thamilini
2 hours ago
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  - மழையுடன் கூடிய வானிலையே நீடிக்கும்!!

வங்காள விரிகுடாவில் வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. 

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (24.10) ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து, அக்டோபர் 25-ஆம் திகதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், அக்டோபர் 26-ஆம் திகதிக்குள், வங்காள விரிகுடாவின் மத்திய-மேற்கு பகுதியில் இந்த அமைப்பு ஒரு சூறாவளியாக (Cyclone) உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இந்த அமைப்பினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதனுடன் தொடர்புடைய காற்றின் சுழற்சி இலங்கை முழுவதும் பரவியுள்ளது. 

 இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!