சம்மாந்துறையில் சிகிச்சை பலனின்றி காட்டு யானை உயிரிழப்பு! தில்சாத் பர்வீஸ்

#SriLanka #Death #Treatment #Ampara #Elephant #Medical #District #LANKA4
Abi
1 hour ago
சம்மாந்துறையில் சிகிச்சை பலனின்றி காட்டு யானை உயிரிழப்பு! தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.

சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண் யானை, கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்ட நிலையில் வயல் பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, யானையைக் காப்பாற்றும் நோக்கில் அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த யானையின் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!