மாவனெல்லையில் அதிரடி விசேட சோதனை: துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் நபர் கைது!
#SriLanka
#ARREST
#Police
#Complaint
#Crime
#LANKA4
Abi
1 hour ago
மாவனெல்லை, கிரிகஹ சந்திப் பகுதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 12 போர் ரகத் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், ஐந்து மெகசின்கள், 156 ஈய உருண்டைகள், ஒரு 12 போர் ரகத் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.