பிக்குகள் தொடர்பான ஜனாதிபதி குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட சுற்றறிக்கை!

#SriLanka #LANKA4 #Monk #Harshana Nanayakkara
Abi
2 hours ago
பிக்குகள் தொடர்பான ஜனாதிபதி குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விசேட சுற்றறிக்கை!

பிக்குகளைச் சிறைச்சாலைகளுக்கு வெளியே அழைத்துச் செல்வது தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட உள்விவகாரச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளை வர்த்தமானியில் வெளியிடவோ அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவோ அவசியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பரிந்துரைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அண்மையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை நிர்வாகச் சட்டத்தில் மாற்றம் இலங்கையின் சிறைச்சாலை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் பிரதான சட்டமாக 1877ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் (Prisons Ordinance) காணப்படுகிறது. 

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டம், 140 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையைக் கொண்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் நியமனம் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் நியமனங்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான ஏற்பாடுகள் இச்சட்டத்தின் ஊடாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

கைதிகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் சுகாதாரம், உணவு, ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது தொடர்பான விதிமுறைகளும் இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்போதைய சமூகத் தேவைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு ஏற்ப சிறைச்சாலை நிர்வாகத்தை நவீனமயப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கமைய, பழைய சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சிறைச்சாலை நிர்வாகச் சட்டமொன்றை (New Prison Administration Act) அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், சிறைச்சாலைகள் தொடர்பான சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், சிறைச்சாலை நிர்வாக நடைமுறைகளை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!