மன்னாரில் ராணுவ வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து - சிப்பாய் ஒருவர் மரணம்

#SriLanka #Mannar #Death #Accident #LANKA4 #Military #L4
Prasu
2 weeks ago
மன்னாரில் ராணுவ வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து - சிப்பாய் ஒருவர் மரணம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், கீலியன்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தொன்றில், ஒரு சிப்பாய் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பதினொரு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலத்த காயமடைந்த பதினொரு பேரும் முதலில் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான 'டிபென்டர்' (Defender) ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த பனை மரம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குறித்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!