மன்னாரில் இராணுவத்தினர் பயணித்த டிஃபென்டர் வாகனம் விபத்து - ஒருவர் பலி
#SriLanka
#Mannar
#Accident
#LANKA4
#Military
Thamilini
2 weeks ago
மன்னார்-தலைமன்னார் பிரதான சாலையில் உள்ள கிளியங்குடியிருப்புப் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராணுவ டிஃபென்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் டிஃபென்டர் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதகி விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.