இலங்கைக்கான கடத்தல் முயற்சி முறியடிப்பு:காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

#India #SriLanka #Tamil Nadu #ARREST #Police #LANKA4
Mahathi
1 week ago
இலங்கைக்கான கடத்தல் முயற்சி முறியடிப்பு:காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரு தனித்தனி சோதனை நடவடிக்கைகளின்போது, இலங்கைக்குக் கடத்த முயன்ற 2 இலட்சம் வலி நிவாரணி மருந்துகள், 531 கிலோகிராம் சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேதாளை மற்றும் புதுமடம் கடலோரப் பகுதிகளில் கியூ பிரிவு மற்றும் கடல்சார் காவல்துறையினர் மேற்கொண்ட முற்றுகை நடவடிக்கைகளின்போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேதாளை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்துகளின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு ஆகியனவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!