இலங்கையின் பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் அபாயம்!

#SriLanka #Rain #LANKA4 #Public #Cyclone #Safety
Mahathi
1 week ago
இலங்கையின் பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் அபாயம்!

வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்ட மிகத் தீவிரமான சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த சூறாவளி எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கரையோரப் பகுதிகளில், பபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த வானிலைத் தொகுதியின் மறைமுகத் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!