பஹாமாஸில் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற பிரிட்டிஷ் பெண் நீரில் மூழ்கி பலி

#Death #Women #water #LANKA4 #Britain #L4 #Bahamas
Prasu
1 day ago
பஹாமாஸில் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற பிரிட்டிஷ் பெண் நீரில் மூழ்கி பலி

பஹாமாஸில் ஸ்நோர்கெலிங் (snorkelling) செய்துகொண்டிருந்தபோது, ​​நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற பிரிட்டிஷ் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

36 வயதான லியான் கிரிகோரி, பள்ளி விடுமுறை காலத்தில் கரீபியன் பகுதிக்குச் சென்றிருந்தபோது இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் தனது கணவர் மற்றும் இரு மகன்களுடன் பிமினி (Bimini) தீவில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது, ​​பலமான நீரோட்டத்தில் அவரது மகன்கள் சிக்கிக்கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தச் சிறுவர்கள் நீரிலிருந்து மீட்கப்பட்டனர். அவரது கணவர் நாதன் கிரிகோரியும் (36 வயது) அவரை மீட்கப் போராடியுள்ளார், அவருக்கு செயற்கை சுவாசம் (CPR) அளிக்க முயன்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!