சமையல் கலை நிபுணர் செஃப் தாமு மறைவு - முதலமைச்சர் விஜய் இரங்கல்

#India #Death #Tamil Nadu #LANKA4 #ChiefMinister #condolence #chef #L4
Prasu
1 day ago
சமையல் கலை நிபுணர் செஃப் தாமு மறைவு - முதலமைச்சர் விஜய் இரங்கல்

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவருமான செஃப் தாமு தனது 72வது வயதில் காலமானார்.

செஃப் தாமு என அறியப்படும் கே. தாமோதரன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமையல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் 2025ம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது.

இந்நிலையில், செஃப் தாமுவின் மறைவுச் செய்தி கேட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் சமையற்கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!