பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
#SriLanka
#Accident
#Hospital
#people
#LANKA4
#Injury
Abi
1 day ago
காலி, அஹங்கம பகுதியில் கத்தலுவ பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும், மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த பேருந்துடன் டிப்பர் ரக வாகனம் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதியும், பேருந்தில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.