‘அர்னாப்’ புயலால் கொந்தளிக்கும் கடல் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

#SriLanka #Rain #District #LANKA4 #Warning #Cyclone
Abi
6 hours ago
‘அர்னாப்’ புயலால் கொந்தளிக்கும் கடல் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டலச் சுழற்சி மற்றும் ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் மிகக் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழையுடன் இடியுடன் கூடிய மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!