வடக்கு மாகாணத்தில் 1,455 மாணவர்களுக்குப் பார்வைப் பாதிப்பு! கண் பரிசோதனையில் வெளிவந்த புதிய தகவல்

#SriLanka #NorthernProvince #Mannar #School #Kilinochchi #Mullaitivu #Eye #LANKA4 #students
Abi
5 hours ago
வடக்கு மாகாணத்தில் 1,455 மாணவர்களுக்குப் பார்வைப் பாதிப்பு! கண் பரிசோதனையில் வெளிவந்த புதிய தகவல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைக் கண் சுகாதாரப் பரிசோதனையில், 1,455 முதலாம் தர மாணவர்களுக்குப் பார்வைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம்” எனும் பாடசாலைக் கண் சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 14,997 முதலாம் தர மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 1,455 பேருக்குப் பார்வைக் குறைபாடுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எம். மலரவன் இன்று (26.10.2026) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!