கிளிநொச்சியில் தொடரும் மழை! மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பாதிப்பு

#SriLanka #Kilinochchi #weather #Rain #Country #District #LANKA4 #students #Farmers
Abi
4 hours ago
கிளிநொச்சியில் தொடரும் மழை! மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (25.10.2026) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் மழைவீழ்ச்சி சாதாரணமாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான மழை காரணமாக, பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் அன்றாடத் தொழில்களை முன்னெடுத்து வருவோர் சீரற்ற காலநிலையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!