பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை இன்று - 03 பொலிஸார் பணியிடை நீக்கம்!

#SriLanka #Death #Police #Investigation #drugs #custody
Thamilini
1 week ago
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை இன்று - 03 பொலிஸார் பணியிடை நீக்கம்!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் பிரோதபரிசோதனை இன்று (27.10) இடம்பெறவுள்ளது. 

கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் கொடூரத் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 நேற்று (25) காலை சந்தேகநபரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் உறவினர்களின் தீவிர கோரிக்கைக்கு இணங்க சந்தேகநபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தபோதிலும், அதற்குள்ளேயே அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூவர் உடன் அமுலாகும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பாளர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரின் சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
c