வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய பீடம் மன்னாரில் அமைக்க நடவடிக்கை!

#SriLanka #Mannar #Vavuniya #LANKA4 #education #University
Abi
6 hours ago
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய பீடம் மன்னாரில் அமைக்க நடவடிக்கை!

மன்னார், விடத்தல்தீவில் வவுனியா பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் பீடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 111 ஏக்கர் காணியில் பீடத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த காணி கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் சாத்தியக்கூறு ஆய்வு கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய, மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், தூண்களை அமைத்து உயர்த்தப்பட்ட கட்டட முறையைப் பயன்படுத்தி, நீர்ப்பாசனப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் பல்கலைக்கழகப் பீடத்தை அமைக்க முடியும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பீடத்தை விரைவாக அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரித்தல் உள்ளிட்ட திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!