வடக்கு மாகாண முதலாம் தர மாணவர்களில் 1,455 பேருக்குப் பார்வைக் குறைபாடு!

#SriLanka #NorthernProvince #Student #Health #LANKA4 #service #inquiry
Abi
5 hours ago
வடக்கு மாகாண முதலாம் தர மாணவர்களில் 1,455 பேருக்குப் பார்வைக் குறைபாடு!

வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களில் 9.7 வீதமானோருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது பாடசாலைக் கண் சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

‘தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம்’ திட்டத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களிலுள்ள 13 கல்வி வலயங்களில் 14,997 மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவர்களில் 1,455 பேருக்குப் பார்வைக் குவியக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

இவர்களில் 1,326 மாணவர்கள் மூக்குக்கண்ணாடி அணியவில்லை.

மேலும், 1,199 மாணவர்கள் கண் பரிசோதனையில் பங்கேற்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அறிக்கை இன்று (26) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, மாணவர்களுக்கான சுகாதாரச் சேவைகளை உறுதிப்படுத்தவும், திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காத பாடசாலைகள் தொடர்பில் விசாரணை நடத்தவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இதற்கிடையில், தீவகம் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலயங்களில் மூக்குக்கண்ணாடி தேவைப்படும் மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!