வெள்ள அனர்த்தத்தால் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
#SriLanka
#Student
#exam
#LANKA4
#Flood
#Examination
Abi
3 hours ago
சபரகமுவ மாகாணத்தில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக, க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படவுள்ளது.
நிலைமை சீரடைந்த பின்னர், மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்குச் சமூகமளித்து மாற்றுத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.