இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது சுவிஸ் எடல்வைஸ் நிறுவனம்!
#SriLanka
#Flight
#LANKA4
#SWISS
#Airlines
Abi
1 hour ago
சுவிட்சர்லாந்தின் எடல்வைஸ் (Edelweiss) விமான நிறுவனம், குளிர்காலப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கான விமான சேவைகளை இன்று (27) மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையை வந்தடைந்த பயணிகளை வரவேற்கும் வகையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்வு, இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.