பிரித்தானியாவை தாக்கிய போயலோ புயலில் சிக்கி இருவர் மரணம்

#Death #Rain #LANKA4 #Flood #Climate #ENGLAND #Strom #L4
Prasu
2 hours ago
பிரித்தானியாவை தாக்கிய போயலோ புயலில் சிக்கி இருவர் மரணம்

பிரித்தானியாவைத் தாக்கிய ‘போயலோ’ (Boelo) புயலால் மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு லண்டனில் 20 வயதுகளிலுள்ள ஒருவரும், ஸ்கொட்லாந்தின் டம்ஃபிரீஸ் அன்ட் கல்வே பகுதியில் 60 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 85 மைல் வேகத்தில் காற்று வீசுவதால், மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மின்சாரத் தடை காரணமாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளிலும் இடையூறுகள் தொடர்கின்றன.

மேலும், பலத்த காற்றும் மழையும் தொடரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!