நாமல் ராஜபக்ஷ புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்!

#SriLanka #Colombo #Parliament #Namal Rajapaksha #LANKA4 #Court
Abi
1 hour ago
நாமல் ராஜபக்ஷ புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், நாமல் ராஜபக்ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!