சிறையில் உள்ள அன்பில் மகேஷை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ, அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பி.டி.அரசகுமார், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் , சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுடன் சேகர்பாபுவும் மத்திய புழல் சிறைக்கு வருகை தந்தார்.