நவம்பர் 2 வரை பெரும்பாலும் மழையற்ற வானிலை: புதிய காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்பு!

#SriLanka #NorthernProvince #weather #LANKA4
Abi
1 hour ago
நவம்பர் 2 வரை பெரும்பாலும் மழையற்ற வானிலை: புதிய காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்பு!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை பெரும்பாலான பகுதிகளில் குறைந்த மழைவீழ்ச்சியுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு வங்காள விரிகுடாவில் தாய்லாந்தின் புகெற் பகுதிக்கு மேற்கே அடுத்த 24 மணித்தியாலங்களில் புதிய காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது நவம்பர் 4ஆம் திகதி தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 2ஆம் திகதி பாக்கு நீரிணைப் பகுதியில் தூத்துக்குடிக்கு அருகிலும், நவம்பர் 8ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்குப் பகுதியிலும் காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும். எனினும், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளிலும், தெற்கு, மேற்கு, ஊவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் இன்றும் நாளையும் சற்றுக் கனமழை பெய்யக்கூடும்.

நீண்டகால வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தமது நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!