நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

#SriLanka #Prison #Negombo #LANKA4 #compensation #Cabinet
Abi
2 hours ago
நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடுகள் மற்றும் சலுகைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் தலா 50 இலட்சம் ரூபாவும், முழுமையான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

மேலும், வருமானம் ஈட்டும் திறனை 100 சதவீதம் இழந்த பகுதியளவு இயலாமையுடைய அதிகாரிகளுக்கு 40 இலட்சம் ரூபாவும், தற்காலிக பகுதியளவு இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 30 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த இழப்பீடுகள், ஏற்கனவே நடைமுறையிலுள்ள இழப்பீடுகளுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளன. இதற்கிடையில், சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், படைக்குத் தேவையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல், சிறப்புப் பயிற்சிகளை வழங்குதல், நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் பொருத்தமான இடத்தில் தலைமையகத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!