04 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!
#SriLanka
#weather
#LANKA4
#Warning
#Land_Slide
Thamilini
1 week ago
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த 'நிலை 1' நிலச்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது,
தேசிய கட்டிடஆராய்ச்சி நிறுவனம் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (31.10) மாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பின்வரும் மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை.
- இரத்தினபுரி மாவட்டம்: அயகம, ஓபநாயக்க, எலபத, குருவிட்ட, பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி.
- கண்டி மாவட்டம்: உடுநுவர மற்றும் யட்டிநுவர.
- கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியந்தோட்டை, புலத்கோஹுபிட்டிய மற்றும் மாவனெல்லை.