பிக் பாஸ் - காதலை வெளிப்படுத்திய போட்டியாளரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறக் கேட்டு கொண்ட பெற்றோர்
#Love
#LANKA4
#family
#Contestant
#Bigg_Boss
#L4
Prasu
2 hours ago
தமிழைப் போல, மலையாளத்திலும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மலையாள பிக்பாஸில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான இன்ஃப்ளூயன்சர் நேஹா பாத்திமா, தனது சக போட்டியாளரான தாஷி ராஜ் என்ற சந்தோஷிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால், போட்டியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வழக்கமான 'குடும்ப வாரத்திற்கு' முன்பாகவே, நேஹாவின் பெற்றோர் நேஹாவை சந்தித்து, அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறக் கேட்டு கொண்டுள்ளனர்.