சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு – நுகர்வோர் கடும் பாதிப்பு!
#SriLanka
#prices
#Vegetable
#LANKA4
#Market
Abi
2 hours ago
சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையக மரக்கறிகளை விநியோகிக்கும் முக்கிய பொருளாதார மத்திய நிலையமான கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 700 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 650 ரூபாயாகவும், கோவாவின் விலை 450 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் சந்தைக்கு மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதுடன், விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.