கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணை!
கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நிகல்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், மிப்ளால் மௌலவி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், வழக்காளரான டாக்டர் கு. சுகுணன் சார்பில் சட்டத்தரணி லக்சான் டயஸ் தலைமையிலான குழுவும் முன்னிலையாகியிருந்தன.
இந்நிலையில், கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பான ஆட்சேபனைகள் உள்ளிட்ட விடயங்கள் இன்றைய விசாரணையில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் நீதிமன்ற விசாரணையின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.