யாழில் TIN இலக்கம் பெறுவதற்காகக் கொளுத்தும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

#SriLanka #Jaffna #people #Department #LANKA4 #heat
Abi
54 minutes ago
யாழில் TIN இலக்கம் பெறுவதற்காகக் கொளுத்தும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணமுடிகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (02.11.2026) காலை முதல் பெருமளவிலான மக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்துள்ளனர்.

சில அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் அதிகளவில் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசை காணப்படுவதுடன், பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!