அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிப்பு - ஜனாதிபதி அறிவிப்பு!

#SriLanka #government #President #AnuraKumaraDissanayake
Mithra
37 minutes ago
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிப்பு - ஜனாதிபதி அறிவிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதுடன், தெரிவு செய்யப்பட்ட சில கொடுப்பனவுகள் தற்போதைய தொகையை விட 100 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இதேவேளை, அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2027ஆம் ஆண்டில் 121,000 பேர் முறையான நடைமுறைகளின் கீழ் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பின்போது போட்டிப் பரீட்சைகள் உள்ளிட்ட முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு பதவிக்கும் உரிய தகைமையும் திறமையும் கொண்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெருந்தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தத்தை 2042ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!