நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி

#India #PrimeMinister #Festival #LANKA4 #NarendraModi #DIwali #L4
Prasu
42 minutes ago
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி

உலகளாவிய ரீதியில் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட நிலையில், தன் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், "அன்புள்ள குடிமக்களே, அனைவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள். இந்தியாவின் பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். 

இப்பண்டிகை இருளை வென்ற ஒளியின், தீமையை வென்ற நன்மையின், மற்றும் விரக்தியை வென்ற நம்பிக்கையின் வெற்றியைக் கொண்டாடுகிறது.

தீபாவளி ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டுவரட்டும். இந்தப் பண்டிகைக் காலம், கருணையைப் பரப்பவும், ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி உழைக்கவும் நம்மை ஊக்குவிக்கட்டும். 

வளமான மற்றும் வளர்ந்த நாட்டை கட்டமைக்க, அனைவரும் புது ஆற்றலுடனும் உறுதியுடனும் முன்னேற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!