மேன்பவர் ஊழியர் முறை ஒழிப்பு: புதிய சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!

#SriLanka #Colombo #government #Employees #Development #Law #LANKA4
Abi
30 minutes ago
மேன்பவர் ஊழியர் முறை ஒழிப்பு: புதிய சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் நடைமுறையில் உள்ள மேன்பவர் (Manpower) ஊழியர் முறையை ஒழித்து, அதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) கொழும்பில் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக நிறுவனங்களுக்காக உழைக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் இடைத்தரகர் நிறுவனங்கள் ஊடாகப் பணம் செலுத்தும் நடைமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேன்பவர் முறையின் கீழ் நீண்டகாலமாகப் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தர நியமனம், வேலைப் பாதுகாப்பு, ஊதியம் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக மேன்பவர் அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமையை ஆராய்ந்து, அவர்களின் எதிர்காலம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனுடன், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களின் கீழ் எழுத்துமூல வேலை ஒப்பந்தங்கள், ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF), விடுமுறை உரிமைகள் மற்றும் தொழிலிடப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், மேன்பவர் முறையை ஒழிப்பதற்கான புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும் திகதி மற்றும் தற்போதைய ஊழியர்களை நிரந்தரமாக்கும் நடைமுறைகள் தொடர்பில் இதுவரை இறுதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

பல ஆண்டுகளாக நிரந்தர வேலைவாய்ப்பின்றி பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தொழிலாளர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!