வெடி வெடித்து மகளுடன் தீபாவளி கொண்டாடிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்

#TamilCinema #Director #LANKA4 #celebration #Music #DIwali #L4
Prasu
1 hour ago
வெடி வெடித்து மகளுடன் தீபாவளி கொண்டாடிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சென்னையில் தனது வீட்டில் தீபாவளியை கொண்டாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இரவு நேரத்தில் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய வாணவேடிக்கையை ஜி.வி. பிரகாஷ் பற்ற வைக்கிறார். 

பின்னர் அங்கிருந்து ஓடி சென்று தனது மகள் அருகே நின்று வானத்தில் வண்ணமயமாக வெடிக்கும் வாணவேடிக்கையை ரசிக்கிறார்.

வானத்தில் சிதறிய வண்ண மின்னல்கள் மற்றும் அந்த கொண்டாட்டத்தின் உற்சாகம் அந்த வீடியோவில் அழகாக பதிவாகியுள்ளது. 

அருகில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தையுடன் அவர் சிரித்தபடி நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!