அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

#SriLanka #Protest #Development #LANKA4 #leave #Secretary
Abi
33 minutes ago
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (09.11.2026) நாடளாவிய ரீதியில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தப் போராட்டம் காரணமாக அரச நிறுவனங்களின் உள்ளகப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குப் பிரிவுகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உள்ளகப் பணிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே பெருமளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், அவர்கள் பணிக்கு சமூகமளிக்காத நிலையில் குறித்த நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் என 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!