மண்டதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Jaffna #International #Project #LANKA4 #Cricket
Abi
20 minutes ago
மண்டதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மண்டதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய, குறித்த திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கைகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் அணியினர் இணைந்து கலந்துகொண்ட கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் யாழ்ப்பாண மக்களின் அபிவிருத்திப் பயணம் தடைப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக அன்றி, மக்களின் எதிர்காலத்தையும் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!