வாகனப் பதிவு முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வரை – முன்பதிவு வசதி அறிமுகம்!
#SriLanka
#LANKA4
#vehicle
#Traffic
#licences
Abi
22 minutes ago
மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, வாகனங்களைப் புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட ஒருநாள் சேவைகளுக்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, தங்களுக்குத் தேவையான சேவைகளைத் திட்டமிட்ட நேரத்தில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.