ரூ. 40 மில்லியன் செலவில் திருகோணமலையில் புதிய கால்நடை வைத்தியர் அலுவலகம் திறப்பு!

#SriLanka #Trincomalee #Governor #LANKA4 #Building
Abi
26 minutes ago
ரூ. 40 மில்லியன் செலவில் திருகோணமலையில் புதிய கால்நடை வைத்தியர் அலுவலகம் திறப்பு!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் புதிய கட்டடம் இன்று (09) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 32 ஆண்டுகளாகப் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த இவ்வலுவலகம், 40 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வினைத்திறனான, இலகுவாக அணுகக்கூடிய சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

32 ஆண்டுகளாக நிலவி வந்த அடிப்படை வசதிக் குறைபாடுகளுக்குத் தீர்வாக, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!