மாணவர்கள் முதல் முதியோர் வரை – பச்சிலைப்பள்ளியில் பல்வேறு தரப்பினருக்கு நிதியுதவி!

#SriLanka #Shritharan #Kilinochchi #government #LANKA4 #students #PradeshiyaSabha
Abi
24 minutes ago
மாணவர்கள் முதல் முதியோர் வரை – பச்சிலைப்பள்ளியில் பல்வேறு தரப்பினருக்கு நிதியுதவி!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதியிலிருந்து 2.64 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவித்தல், பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குப் பொதிகள் விநியோகம், முதியோர்களுக்கான உதவிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முகமாலை உப அலுவலகத்தில், தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.

மேலும், நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!