வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி!
#SriLanka
#Death
#Police
#Investigation
#LANKA4
#Electricity
Mithra
6 hours ago
குருணாகல், வாரியபொல – அவுல்லேகம பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த வீதிவிளக்கை அணைக்க முயன்ற 61 வயதுடைய கணவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான கணவரைக் காப்பாற்ற முயன்ற 60 வயதுடைய மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.