பாரிய மண்சரிவு – கம்பளையில் பிரதான வீதி தாழிறக்கம்,போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு!
#SriLanka
#Rain
#Road
#LANKA4
#Traffic
#Gampola
Mithra
23 hours ago
கண்டி, கம்பளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.
கம்பளை – வெவதென்ன பகுதியிலிருந்து உடுதெனிய ஊடாக நாரங்கின்ன பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உடபலாத்த பிரதேச சபையினால் அணையொன்று நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.