போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 அவசர இலக்கம் அறிமுகம்!

#SriLanka #drugs #LANKA4 #Public
Abi
18 hours ago
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 அவசர இலக்கம் அறிமுகம்!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘ரட்டம ஏகட்ட’ (Ratama Ekata) தேசிய நடவடிக்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் ஊடாக, பொதுமக்கள் 24 மணிநேரமும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்க முடியும்.

அத்துடன், 1818.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவல்களைப் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சேவையின் ஊடாகத் தகவல்களை வழங்க முடியும்.

இந்தச் சேவையின் முக்கிய அம்சமாக, தகவல் வழங்குவோரின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் பிரிவினர் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ‘ரட்டம ஏகட்ட’ தேசிய செயல்பாட்டுக் குழுவின் மேற்பார்வையில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, தங்களுக்குத் தெரிந்த நம்பகமான தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!