ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஜனவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

#SriLanka #Colombo #drugs #LANKA4 #Case #Court
Abi
1 day ago
ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஜனவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி முன்-விசாரணை மாநாட்டிற்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொக்கெய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷிரான் பாசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கை மேலதிக முன்-விசாரணை மாநாட்டிற்காக ஜனவரி 25ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

1,200 கிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் குறித்த மூன்று பிரதிவாதிகளுக்கும் எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!