இலங்கையை உலக வர்த்தக மையமாக மாற்ற பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

#SriLanka #PrimeMinister #LANKA4 #President #Engineer #Harini Amarasooriya
Abi
15 hours ago
இலங்கையை உலக வர்த்தக மையமாக மாற்ற பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

மக்களை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகப் பெருமளவில் முதலீடு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரதான வர்த்தக மையமாக இலங்கையை மாற்றுவதற்குப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்வல்லுநர்களும் பங்களிக்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப பொறியியல் கல்வி மற்றும் பயிற்சிகள் எதிர்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத் துறைக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காமல், அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் நிறைவு செய்வதற்குத் தேவையான நிர்வாகத் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ஸ்மார்ட் பொறியியல், மீள்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை” (Smart Engineering, Resilience and Sustainability) எனும் கருப்பொருளில், இன்று (11) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்ற மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) மற்றும் மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் (CESL) 2026ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!