பாகிஸ்தானில் காவல்துறை வாகனத்தின் மீது தாக்குதல்: மூத்த அதிகாரி உட்பட 11 காவலர்கள் மரணம்

#Death #Police #Attack #Pakistan #LANKA4 #Rescue #L4
Prasu
8 hours ago
பாகிஸ்தானில் காவல்துறை வாகனத்தின் மீது தாக்குதல்: மூத்த அதிகாரி உட்பட 11 காவலர்கள் மரணம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கைக்கு எதிராகச் சென்ற காவல்துறை வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) உட்பட 11 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துளளார்.

கோஹாட் மாவட்டத்தின் 'கும்பாட் கோஹாட்' (Gumbat Kohat) பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை குழு, கோஹாட் மற்றும் காரக் (Karak) பகுதிகளுக்கு இடையே உள்ள 'டார்போகாச் ஜலந்தர் பண்டா' (Darbokach Jalandhar Banda) என்ற இடத்தில் தாக்குதலுக்கு உள்ளானது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் முஹம்மது நுமான் ஜெப் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மலை உச்சியிலிருந்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் கும்பாட் பகுதியின் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ஹைதர் ஜமான் மற்றும் உதவி ஆய்வாளர் முக்தியார் ஆகியோர் அடங்குவர்.

கைபர் பக்துன்க்வா ஆளுநர் பைசல் கரீம் குண்டி இந்தத் தாக்குதலைக் கண்டித்தார்; இது குற்றக்கும்பல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான கூட்டுச் சதி என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!